இலங்கை
21 பேரை பலியெடுத்த கோர விபத்து ; மூத்த காவல் கண்காணிப்பாளர் விசேட விசாரணை
21 பேரை பலியெடுத்த கோர விபத்து ; மூத்த காவல் கண்காணிப்பாளர் விசேட விசாரணை
நேற்று (11) காலை கொத்மலை, கரடிஎல்ல பகுதியில் நடந்த பேருந்து விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து கொத்மலை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதுவரை 16 ஆண்கள் மற்றும் 06 பெண்கள் உட்பட 22 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
35க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.