உலகம்

அமெரிக்காவில் மேலும் இரு இந்திய மாணவர்கள் மரணம்

Published

on

அமெரிக்காவில் மேலும் இரு இந்திய மாணவர்கள் மரணம்

அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். 

இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.

Advertisement

திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு வெளியேறி ஒரு மரத்தில் மோதிய பின்னர் பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் சவுரவ் பிரபாகர், மானவ் பட்டேல் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

காரில் பயணித்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version