சினிமா
இந்திய பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்!! அதுவும் இத்தனை பேரா..
இந்திய பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்!! அதுவும் இத்தனை பேரா..
விளையாட்டு வீரர்கள் பலர் நடிகைகள் மற்றும் மாடல்களை திருமணம் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் இந்திய பெண்கள் மீது காதல் கொண்டு திருமணம் செய்வது அரிதான ஒன்று. அப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யார் யார் இந்திய பெண்ணை திருமணம் செய்தார்கள் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்..பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரரான ஜாகீர் அப்பாஸ், 1988ல் பாலிவுட் நடிகை ரீட்டா லூத்ராவை காதலித்து திருமணம் செய்து ரீட்டா சீனிமாவில் இருந்து விலகி பாகிஸ்தான் கராச்சியில் செட்டிலாகிவிட்டார்.பாகிஸ்தான் வீரர் மொஹ்சின் கான் பாலிவுட் நடிகை ரீனா ராயை 1983ல் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்புஇன் 7 ஆண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, இந்திய விமான இஞ்சினியராக பணியாற்றிய சாமியா அர்சூ என்பவரை 2019ல் காதலித்து திருமணம் செய்தார். சாமியா திருமணத்திற்கு பின் பாகிஸ்தானில் செட்டிலாகி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சானியா மிர்சாவை காதலித்து 2010ல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.