சினிமா
கல்யாணத்தில கதைச்சது ஒரு குத்தமா..! ஜெயம் ரவிக்கு சப்போர்ட் பண்ணும் கூல் சுரேஷ்..!
கல்யாணத்தில கதைச்சது ஒரு குத்தமா..! ஜெயம் ரவிக்கு சப்போர்ட் பண்ணும் கூல் சுரேஷ்..!
தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் நடிகர் கூல் சுரேஷ். சிறிய கதாப்பாத்திரங்களிலும், நகைச்சுவை கலந்த supporting ரோலிலும் நடித்து, ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் பேசப்படுக் கொண்டே வருகின்றார்.அதற்கு காரணம், இவர் ஐசரி கணேஷின் மகளின் திருமண விழாவுக்கு சென்றபோது ஜெயம் ரவி மற்றும் கெனிஷா வந்த போது நடந்த உரையாடலாலேயே தற்பொழுது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் கூல் சுரேஷ் கூறியதாவது, “ரெண்டு நாளுக்கு முன்னாடி ஐசரி கணேஷின் மகளோட திருமணத்துக்கு போனேன். அங்க நிறைய சினிமா பிரபலங்கள் வந்திருந்தாங்க. அப்போ ஜெயம் ரவியும் கெனிஷாவுடன் வந்திருந்தார். ஜெயம் ரவி என்னட வந்து ‘சாப்பிட்டியா? எப்படி இருக்க? படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்ட போல இருக்கு… வாழ்த்துக்கள்!’ என்று சொன்னார். அதைக் கேட்டதும் மிகவும் சந்தோசமாக இருந்தது.” என்று கூறியிருந்தார்.இந்த உரையாடலுக்குப் பிறகு, கூல் சுரேஷுக்கு ஒரு பதற்றமூட்டும் வகையில் மொபைல் கால் வந்ததாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில், “கால் எடுத்த நபர் நீங்க ஜெயம் ரவிக்கு சப்போர்ட் பண்ணுறீங்களா?” என்று கேட்டிருந்தார்.அதற்கு “நான் அவருக்கு சப்போர்ட் பண்ணல. அது அவரோட personal life. நான் ஒரு கல்யாணத்துக்கு போனேன். அவர் என்னிடம் பேசினார். நான் அவங்க பேசியதை கேட்டு, மனதார சந்தோஷப்பட்டேன். அதில என்ன தவறு?”. என்று கூல் சுரேஷ் பதிலளித்திருந்தார். இந்த வீடியோ தற்பொழுது இன்ஸ்டாவில் வைரலாகிக் கொண்டு வருகின்றது.