இலங்கை
குரு பெயர்ச்சியால் நிதி ஆதாயம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
குரு பெயர்ச்சியால் நிதி ஆதாயம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, குரு கிரகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகும். ஏனெனில் இந்த கிரகம் நல்ல பலன்களை அள்ளித் தரும். ஒன்பது கிரகங்களில் வியாழன் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, அதிலும் குருவின் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குருவின் அருளால், வாழ்க்கையில் இன்பங்கள் பெறலாம்.
அந்த வகையில் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான் வாக்கிய பஞ்சங்கத்தின் படி மே 11 ஆம் திகதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.
ஆனால் தற்போது திருக்கணிதம் பஞ்சங்கத்தின் படி நாளை அதாவது மே 14 ஆம் திகதி குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. எனவே இந்த குருப்பெயர்ச்சியில் நிதி ஆதாயம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
இரண்டாம் வீட்டில் குரு பெயர்ச்சி அடையப் போவதால் தொழில்முறை வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக தகவல் தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் நிதி மேலாண்மை ஆகிய துறையில் பணியாற்றுபவர்கள் பலன் அடைவார்கள். தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும், பதவி உயர்வுகள், வணிக விரிவாக்கம் மற்றும் தொழிலில் அங்கீகாரம் கிடைக்கலாம். குறிப்பாக நிதி, வங்கி, கல்வி மற்றும் பொதுப் பேச்சு போன்ற துறைகளில் பலன் உண்டாகலாம்.
ஆறாவது வீட்டின் அம்சம் வேலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். ரிஷப ராசிக்காரர்கள் பணியிடத்தில் பெற்ற சவால்களை சமாளித்து புதிய உயர்வை பெறுவீர்கள். எதிர்பாராத தொழில் மாற்றங்கள், ஆராய்ச்சி சார்ந்த தொழில்களில் வாய்ப்புகள் வரக்கூடும்.
சம்பள உயர்வு, முதலீடுகள் மற்றும் சிறந்த சொத்து மேலாண்மை போன்ற நிதி வளர்ச்சியை ஏற்படுத்தும். கடன் தொல்லையில் இருந்து விலகி நிதி நிலை மேம்படும். குருவின் பார்வை, காப்பீடு அல்லது வணிக கூட்டாண்மை மூலம் ஆதாயங்களைக் கொண்டு வரக்கூடும்.
குருவின் பெயர்ச்சி குடும்பப் பிணைப்புகளையும் வீட்டு நிதி ஸ்திரத்தன்மையையும் பலப்படுத்த உதவும். குடும்பத்தின் நலனுக்காக அதிக பொறுப்புகளை ஏற்க நேரிடும். சமூக அந்தஸ்தை மேம்படுத்தும் மற்றும் குடும்பத்தின் கௌரவத்தை பலப்படுத்தும்.
மே 14, 2025 முதல் மிதுன ராசியின் இரண்டாவது வீட்டில் குரு பெயர்ச்சி, ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை, தொழில் முன்னேற்றம் மற்றும் உறவுகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவருகிறது. இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்கள் நிதி திட்டமிடல், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.