சினிமா

கூடுவிட்டுக் கூடு பாயும் சதீஷ்..! பிரமாண்ட செலவில் ரெடியாகும் புதிய திரைப்படம்..!

Published

on

கூடுவிட்டுக் கூடு பாயும் சதீஷ்..! பிரமாண்ட செலவில் ரெடியாகும் புதிய திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் நடிகர் சதீஷ் தனது நகைச்சுவை நேர்த்தியால் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர், வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஹீரோவாக நடித்துவரும் ஒரு புதிய படம் தொடர்பான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.அந்தப்படம் தொடர்பாக சில சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது திரையுலக வட்டாரங்களில் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டெஸ்ட் ஷூட்டிற்கு மட்டும் ரூ.20 லட்சம் செலவானது என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர்கள் தெரிவித்திருப்பதாவது, இது கமர்ஷியல் படமாக இருக்கும். அதாவது, காமெடி, ஆக்‌ஷன், உணர்வு மற்றும் சஸ்பென்ஸ் அனைத்தும் கலந்து, “கூடு விட்டுக் கூடு பாயுற மாதிரியான” கதைக்களம் கொண்ட படமாக உருவாகின்றது.அந்தவகையில், படத்தின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட்டிற்கு மட்டும் ரூ.20 லட்சம் செலவழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தமிழ் சினிமாவில் ஒரு டெஸ்ட் ஷூட்டிற்கு இவ்வளவு முதலீடு செலவிடுவது மிகவும் அபூர்வம் என்றே கூறவேண்டும். தற்போது டெஸ்ட் ஷூட் இரண்டாம் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதற்குப் பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முதன்மை போஸ்டர், கதையின் விளக்கம் மற்றும் வெளியீட்டுத் திகதி போன்றவை குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version