இலங்கை
கொத்மலை பேருந்து விபத்து – உயிருக்கு போராடிய 06 மாத குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்!
கொத்மலை பேருந்து விபத்து – உயிருக்கு போராடிய 06 மாத குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்!
கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த இந்த குழந்தை முதலில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்த குழந்தை உட்பட கம்பளை மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்ட மூன்று குழந்தைகளும் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையின் பணிப்பாளர் ஏ.எம்.எஸ். வீரபண்டார தெரிவித்ததாவது, ஆறு மாத குழந்தையின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் காண்பதாகவும், அதேவேளை 6 மற்றும் 11 வயதுடைய மற்ற இரு குழந்தைகளும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை