சினிமா
“கோவிந்தா…” பாடலால் வெடித்த பூகம்பம்..!“DD Next Level” படத்திற்கு மீண்டும் ஆபத்து!
“கோவிந்தா…” பாடலால் வெடித்த பூகம்பம்..!“DD Next Level” படத்திற்கு மீண்டும் ஆபத்து!
நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படமாக “DD Next Level” காணப்படுகின்றது. இந்தப் படம் தற்போது ரிலீஸை முன்னிட்டு புரொமோஷன் பாடல்கள் மற்றும் வீடியோக்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் இடம்பெறும் “கோவிந்தா கோவிந்தா…” என்ற பாடல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க வழக்கறிஞர் அணி நிர்வாகி அஜித் என்பவர், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், இந்துப் மதத்தில் மிக உயர்ந்த பக்தி உணர்வுடன் கூடிய “கோவிந்தா” என்ற வார்த்தையை பாடலில் தவறாக பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். இதன் மூலம், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பாடல் அமைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.அஜித் அளித்துள்ள புகாரில், நடிகர் சந்தானம், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தற்போது படக்குழு இந்த புகாருக்குத் தங்கள் பதிலை வழங்கவில்லை. ஆனால் பாடல் மற்றும் காட்சிகள் திரைப்படத்தின் கதையின் பின்னணிக்கேற்பவும், சினிமாவுக்கான கதைக்களத்திற்கேற்பவும் உருவாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன..நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “DD Next Level” திரைப்படம், ஒரு காமெடி கலந்த மாஸ் ஆக்சன் படமாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது உருவாகியுள்ள இந்த பாடல் சர்ச்சை, படம் வெளியீட்டை முன்னிட்டு எதிர்பாராத திசையில் கவனத்தை திருப்பியுள்ளது.