சினிமா

சுதாகரின் சூழ்ச்சியை இனியாவிற்குப் போட்டுடைத்த எழில்..!புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி

Published

on

சுதாகரின் சூழ்ச்சியை இனியாவிற்குப் போட்டுடைத்த எழில்..!புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, நிதீஷ் இனியாவைப் பாத்து ஏன் அமைதியா இருக்க என்று கேக்கிறார். அதைக் கேட்ட இனியா நான் அம்மாவோட ரெஸ்டாரெண்டைப் பற்றி ஜோசிச்சுக் கொண்டிருக்கேன் என்று சொல்லுறார். அதுக்கு நிதீஷ் புருசனோட இருக்கும் போது அம்மாவப் பத்தி எல்லாம் ஜோசிக்கக் கூடாது இனியா என்கிறார். இதனை அடுத்து இனியா அம்மாவோட ரெஸ்டாரெண்டுக்கு போய்ட்டு பிறகு உங்கட சித்தப்பா வீட்ட போயிருக்கலாம் என்று சொல்லுறார்.அதைக் கேட்ட நிதீஷ் நான் என்ன வேணும் என்டா பண்ணேன் தெரியாம தானே கூட்டிக் கொண்டு போனேன் என்கிறார். மேலும் என்னோட அப்பா சொன்னாரு சித்தப்பா வீட்ட போகணும் என்று அதால போனோம் அவளா தான் அதில என்ன இருக்கு என்று கேக்கிறார். இதனை அடுத்து நிதீஷ் இனியாவைப் பாத்து உங்கட வீட்ட எப்புடியோ தெரியாது எங்கட வீட்டில அப்பா சொல்லுறத எல்லாரும் கேட்டு நடந்துக்கனும் இனி நீயும் அப்புடித்தான் இருக்கனும் என்று கோபமாகச் சொல்லுறார்.அதனை அடுத்து இனியா எழிலோட பாக்கியாட ரெஸ்டாரெண்டுக்கு வாறார். அங்க வந்து பாக்கியாவோட ரெஸ்டாரெண்டைப் பாத்த இனியா இதுவா அம்மாவோட ரெஸ்டாரெண்ட் என்று கவலையாக கேக்கிறார். மேலும் எதுக்கு இப்படி சின்ன ரெஸ்டாரெண்டை வாங்கியிருக்காங்க என்று ஏழிலைப் பாத்துக் கேக்கிறார். பின் இனியா பாக்கியாவைப் பாத்து என்ன அம்மா இதெல்லாம் நீ மூனாவதா ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிருக்க என்ற விஷயத்தைக் கேட்டு நான் ரொம்பவே சந்தோசப்பட்டேன். ஆனா இது ரொம்பவே சின்னதா இருக்கு என்று கேட்கிறார்.அதுக்கு பாக்கியா எதுவுமே கதைக்காம அமைதியா இருக்கிறார். இதனை அடுத்து இனியா ஏழிலைப் பாத்து எதுக்காக அம்மா இவ்வளவு சின்ன ரெஸ்டாரெண்டை ஆரம்பிச்சிருக்கா என்று கேக்கிறார். அதைக் கேட்ட எழில் சுதாகர் செய்ததை எல்லாம் இனியாவுக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட இனியா அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version