வணிகம்
தங்கத்தை கம்மி வட்டிக்கு அடகு வைத்து… நகையை இப்படியும் வாங்கலாம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுக்கும் டிப்ஸ்
தங்கத்தை கம்மி வட்டிக்கு அடகு வைத்து… நகையை இப்படியும் வாங்கலாம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுக்கும் டிப்ஸ்
தங்க நகைகள் வெறும் அழகுக்காகவும், சமூக அந்தஸ்த்திற்காகவும் மட்டும் பயன்படுவது கிடையாது; அவை ஒரு சிறந்த முதலீடாகவும் கருதப்படுகின்றன. காலப்போக்கில் தங்கத்தின் மதிப்பு பொதுவாக உயர்ந்து கொண்டே செல்வதால், தங்க நகைகள் ஒரு பாதுகாப்பான சேமிப்பாக பார்க்கப்படுகின்றன. அவசர காலங்களில் அல்லது பொருளாதார நெருக்கடி சமயங்களில் இந்த நகைகளை விற்று அல்லது அடமானம் வைத்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும். நகர்ப்புறம் அல்லது கிராமப்புறம் என எந்த பகுதியில் வசிக்கும் மக்களாக இருந்தாலும், தங்க நகைகள் ஒரு குடும்பத்தின் சொத்தாகவும், பாதுகாப்பாகவும் மதிக்கப்படுகின்றன.இத்தகைய மதிப்பு வாய்ந்த தங்க நகையை எவ்வாறு சுலபமான முறையில் வாங்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்தக் கேள்விக்கான விடையை பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.அதனடிப்படையில், தங்க நகை வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர் பின்பற்ற வேண்டிய சில எளிமையான வழிமுறைகள் குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது நம்மிடம் 5 பவுன் நகை இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால், அதில் மூன்று பவுன் நகையை கூட்டறவு வங்கியில் குறைவான வட்டிக்கு முதலில் அடமானம் வைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் நகைகளை வாங்கிக் கொள்ளலாம். மற்றொரு புறம், அடகு வைத்த நகைக்கு 12 மாதங்களும் சரியாக வட்டி செலுத்த வேண்டும். இப்போது, மீண்டும் அந்த நகையை அடகு வைக்க வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் பணத்திற்கு மீண்டும் தங்க நகை வாங்கலாம் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்துகிறார்.இந்த சுழற்சி முறையில் தங்க நகை வாங்குவது தான் சுலபமான வழி என அவர் எடுத்துரைக்கிறார். எனவே, புதிதாக தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் பொருளாதார நிலை அறிந்து இந்த முடிவை எடுக்கலாமா அல்லது வேண்டாமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.நன்றி – Money Pechu Youtube Channel