பொழுதுபோக்கு
நடிக்கிறீங்களா? இல்லையா? எம்.எஸ்.வி.யை கண்டபடி மிரட்டிய முதல் பட இயக்குனர்!
நடிக்கிறீங்களா? இல்லையா? எம்.எஸ்.வி.யை கண்டபடி மிரட்டிய முதல் பட இயக்குனர்!
எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட முன்னணி நடிகர்கள் பலருக்கு தனது இசையால் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், காதல் மன்னன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க 6 மாதங்கள் கஷ்டப்பட்டதாக, சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற, சரண், கூறியுள்ளார்.இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். அதனைத் தொடர்ந்து அமர்க்களம், ஜே.ஜே, அட்டகாசம், அசல், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக ஆரவ் நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இதையும் படியுங்கள்: எம்.ஜி.ஆர், சிவாஜி கிட்ட அடி வாங்கிட்டேன்; இப்போ உன்கிட்டயும் அடி வாங்கனுமா? பிரபல இயக்குனரை விராட்டிய நம்பியார்!கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சரண், அடுத்து காதல் மன்னன் படத்தை இயக்க தயாரானார். இந்த படத்தை, வெங்கடேஷ்வராலயம் என்ற நிறுவம் சார்பில், சுதிர் குமார் என்பது தயாரித்திருந்தார். அஜித்துடன் இணைந்து, புதுமுகம் மானு, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்த படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதானின் தீவிர ரசிகராக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் காமெடி இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த படத்தில் முதலில் இந்த மெஸ் விஸ்வநாதன் கேரக்டரே இல்லை. ஒருமுறை விவேக், இயக்குனர் சரணுக்கு போன் செய்து, எம்.எஸ்.வி இன்டர்வியூ ஒன்றை பார்க்குமாறு கூறியுள்ளார். அதை பார்த்த சரண் தனது படத்தில் இவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.அதே சமயம் கதை விவாதம் எல்லாம் முடிந்துவிட்டது நடுவில் எப்படி ஒரு கேரக்டரை சேர்ப்பது என்று யோசித்து ஹீரோ ஒரு மேன்ஷனில் தங்கியிருப்பார் என்பதால் அந்த மேன்ஷனில் மெஸ் வைத்திருப்பவர் என்ற கேரக்டரை எம்.எஸ்.விக்காக உருவாக்கியுள்ளனர். அதன்பிறகு விவேக்குடன் சென்று எம்.எஸ்.வியை சந்தித்துள்ளார் சரண். ஆனால் அவரோ என்னால் நடிக்க முடியாது என்று முதல் வார்த்தையிலேயே கூறியுள்ளார். நடிக்கதான் நடிக்க தான் வந்தேன். ஆனால் இப்போது நான் மியூசிக் டைரக்டர் என்னை மியூசிக் போட கூப்பிடுங்க என்று கூறியுள்ளார்.அதன்பிறகு 2-3 மாதங்கள் அவரிடம் சரணும் விவேக்கும் இணைந்து நடையே நட என்று நடத்துள்ளனர். ஆனாலும் எம்.எஸ்.வி நடிக்க ஒப்புக்கொள்வதைக இல்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் அவரை கண்டபடி இருவரும் மிரட்டியுள்ளனர். நாங்கள் உங்களை நடிக்க கூப்பிட்டும் நீங்கள் வரவில்லை. உங்க அம்மா சொன்னாலாவது வருவீங்களானு பார்ப்போம் என்று சொல்லி, எம்.எஸ்.வி அம்மா படத்துக்கு முன்பு ஒரு லெட்டர் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.அம்மா மீது பயமும் மரியாதையும் கொண்ட எம்.எஸ்.வி ஒரு வழியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்திற்காக 10 லட்சம் சம்பளம் கேட்ட எம்.எஸ்.வி, அதில் 5 லட்சம் தனக்கும், 5 லட்சம் ராமமூர்த்திக்கும் என்று கூறியுள்ளார். இதை இயக்குனர் சரண் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.