சினிமா
நாட்டில் அமைதி வேண்டும்.!சோனி ரஸ்தானின் பேச்சால் வெடித்தது ஆலியாவின் குடியுரிமை விவகாரம்.!
நாட்டில் அமைதி வேண்டும்.!சோனி ரஸ்தானின் பேச்சால் வெடித்தது ஆலியாவின் குடியுரிமை விவகாரம்.!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அண்மைத் தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழும் விவாதங்கள், இவை எப்போதும் மக்கள் உணர்வுகளையும், பிரபலங்களின் நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன. அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் அவரது தாயார் சோனி ரஸ்தான் மீது இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை முன்னிட்டு, சோனி ரஸ்தான் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அதில், “போர் என்பது தீர்வு அல்ல. அமைதி, உரையாடல், மனிதநேயம் தான் மனித குலத்தின் எதிர்காலத்திற்கு சிறந்த வழி” என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த கருத்து, சர்வதேச நோக்கில் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இந்திய சமூக வலைத்தளங்களில் பலரால் எதிர்வினை ஏற்படுத்தும் வகையில் புரிந்துகொள்ளப்பட்டது.சோனி ரஸ்தானின் அந்த அமைதிக்கான வேண்டுகோள் சிலரால் புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் மற்றொரு பகுதி நெட்டிசன்கள் அவருக்கு கடுமையான எதிர்வினைகளைத் தெரிவித்தனர். குறிப்பாக, ஒரு நெட்டிசன் தனது பதிவில்,”அமைதிதான் குறிக்கோள் என்றாலும், மோதலை யார் உண்மையிலேயே ஆதரிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். நமது வீரர்கள் மிகுந்த கவனத்துடன் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று இந்தியாவின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் ஒரு நடிகையின் தாயார் இவ்வாறு பொறுப்பற்று பேசுவது கவலையளிக்கிறது.”எனப் பதிவு செய்திருந்தார்.உண்மையில், ஆலியா பட் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் அவரது தாயார் சோனி ரஸ்தான், பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இதனால், சோனியின் வழியாக ஆலியாவுக்கு பிரிட்டன் குடியுரிமை கிடைத்துள்ளது என்பது உறுதி. இதனால் தான் இப்படியான பதிவுகளை வெளியிடுகின்றனர் எனவும் சிலர் கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.