இலங்கை

பிரான்ஸில் வீடு புகுந்து தாக்குதல்; யாழ்ப்பாணத்தை நேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

Published

on

பிரான்ஸில் வீடு புகுந்து தாக்குதல்; யாழ்ப்பாணத்தை நேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

   பிரான்ஸில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த வவுனியாவைச் சொந்த இடமாகக் கொணட 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

90 ஆயிரம் யூரோக்களை ஏமாற்றிய குடும்பஸ்தர்

பிரான்சில் சீட்டுப் பிடிப்பது சட்டவிரோதமான செயலாகும். இருப்பினும் அங்கு வாழும் தமிழர்கள் பலர் பணம் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக பலருடன் சேர்ந்து சீட்டுப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

Advertisement

இவ்வாறான ஒரு சீட்டுப்பிடிப்பில் வவுனியா நபர் சுமார் 90 ஆயிரம் யூரோக்களை ஏமாற்றியதாக கூறப்படுகின்றது.

அதோடு அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி வேறு ஓர் இடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது.

பணம் கொடுத்தவர்கள் சந்தேக நபர் மறைந்து வாழும் இடத்தை மோப்பம் பிடித்து அங்கு நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

Advertisement

இத் தாக்குதலில் படுகாயமடைந்த வவுனியா குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version