பொழுதுபோக்கு
முத்துவை பழி தீர்த்த அருண்; ஸ்ருதி அம்மாவான தெரியவந்த உண்மை: ரோஹினி மாட்டுவாரா?
முத்துவை பழி தீர்த்த அருண்; ஸ்ருதி அம்மாவான தெரியவந்த உண்மை: ரோஹினி மாட்டுவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோஹினி மனோஜ்ஜிடம் இந்த வீட்டில் எனக்கு மரியாதையே இல்லை. உன்கிட்ட பேசவே விட மாட்ராங்க என்று சொல்ல, நீ எதுக்கு எங்க அம்மாகிட்ட பொய் சொன்ன? அவங்ககிட்ட பொய் சொன்னாலும் என்கிட்ட எதுக்கு பொய் சொன்ன என்று கேட்க, ரோஹினி அமைதியாக இருக்கிறாள். அதன்பிறகு நீ என் அம்மாவை சமாதானப்படுத்து என்று சொல்கிறான்.இதை கேட்ட ரோஹினி ஏன் நீ சமாதானப்படுத்த மாட்டியா என்று கேட்க, நானா பொய் சொன்னேன் என்று மனோஜ் திரும்ப கேட்க, நீ கூடத்தான் ஜீவாவிடம் ஏமார்ந்த, மீனா நகைகயை எடுத்த பல தப்புகள் செய்த உன்னையே உங்க அம்மா ஏத்துக்கும்போது என் என்னையை ஏற்றுக்கொள்ள மாட்டாங்களா என்று கேட்க, இதான், உன் தப்பை சொன்ன பழையது எல்லாம் கிளரி அடுத்தவங்கமேள பழிபோடுவ என்று மனோஜ் கோபப்டுகிறான்.அப்போது ஸ்ருதியின் அம்மா ரோஹினிக்கு முத்துவின் வீடியோயை அனுப்ப, உங்க தம்பியும் தான் தப்பு பண்ணிருக்கார் என்று ரோஹினி சொல்கிறார். இந்த பக்கம், முத்து எவ்வளவோ சொல்லியும், அவன் லைசன்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் கான்ஸ்டபிள், வேண்டுமென்றேதான் வண்டியில் இடித்தான் என்று சொல்ல, மற்ற போலீஸ்காரர்களும், இதை நம்பி முத்து மீது கேஸ் பொடுகின்றனர்.ஸ்ருதியின் அம்மா அந்த வீடியோவை ஸ்ருதிக்கும் அனுப்ப, அவள் ரவியிடம் காட்டுகிறாள். இதனால் வீ்ட்டில் பிரச்னை வெடிக்கிறது. இந்த நேரத்தில் மீனா முத்துவுக்கு போன் செய்ய, அவன் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது தெரிகிறது. இதனால் மீனா போலீஸ் ஸ்டேஷன் வந்து முத்து மீது தப்பு இல்லை என்று சொல்ல அதை எந்த போலீஸூம் நம்பவில்லை. இதனிடையே கான்ஸ்டபிள் வெளியில் வர, முத்து காரை எடுத்து வந்த போலீஸ் கட்டுடன் வெளியில் வருகிறார்.இதை பார்த்த கான்ஸ்டபிள் என்ன என்று விசாரிக்க, அவன் காரில் பிரேக் இல்லை. யாரோ வயரை வெட்டி ஆயில் முழுவதும் வெளியே போகும்படி செய்திருக்கிறார்கள். திட்டமிட்டு செய்த வேலை என்று சொல்ல, சரி இதை அவனுக்கு தெரியாம பார்த்துக்கோ, அவன் என்ட மோதிக்கிட்டே இருக்கான், இப்போ 6 மாதம் வீட்டில் இருந்தால் தான் என்னோட பவர் அவனுக்கு தெரியும் என்று சொல்லி உண்மையை ஆப் செய்துவிடுகிறார். மேலும், எதுவா இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கோங்க என்று சொல்லி மீனா முத்து இருவரையும் அனுப்பிவிடுகின்றனர்.இங்கே வீட்டுக்கு வரும் ஸ்ருதியின் அம்மா இப்படிப்பட்ட வீட்டில் என் மகள் இருக்கா கூடாது என்று சொல்ல, இதை கேட்ட விஜயா, அவன ஜெயிலுக்கு போறது ஒன்றும் புதுசு இல்லையே சின்ன வயசிலே போனவன் தான் என்று சொல்ல, அவன் செய்யாத தப்புக்கு போனான், நான் எதையும் சொல்ல கூடாது என்று பார்க்கிறேன் என்னை சொல்ல வச்சிராத என்று அண்ணாமலை சொல்ல, முத்துவும் மீனாவும் உள்ளே வருகின்றனர். அப்போது ஸ்ருதியின் அம்மா பேச, நாங்களே பல பிரச்னையில் இருக்கிறோம் என்று மீனா சொல்ல அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.