இலங்கை
முள்ளிவாய்க்கால் வாரத்தில் இராணுவ வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மக்கள்
முள்ளிவாய்க்கால் வாரத்தில் இராணுவ வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மக்கள்
கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள முதலாவது படைப்பிரிவு இராணுவ தலைமையகம் முன்பு குறித்த வெசாக் வலயம் திறந்து வைக்கப்பட்டது.
இதில் மதத் தலைவர்கள் மாவட்ட செயலாளர் சு. முரளிதரன் முதலாவது படைப் பிரிவின் கட்டளையதிகாரி உள்ளிட்ட இரானுவ அதிகாரிகள் மற்றும் படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
அதேவேளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு கடலை தானம் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கிளிநொச்சி நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அதேவேளை முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்படு வரும் நிலையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூரும் வகையில் தமிழர்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகது.