இலங்கை
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
தமிழ் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் (13) யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து தரிப்பு நிலையத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை