இலங்கை
அமைச்சரவையில் மாற்றங்களில்லை!
அமைச்சரவையில் மாற்றங்களில்லை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும், பிரதமர் பதவியிலும் மாற்றம் வரவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின. இவ்வாறான பின்னணியிலேயே, அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்று தெரியவருகின்றது.
கடந்த 6 மாத காலப்பகுதியில் அரச நிறுவனங்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை பெற்றுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.