சினிமா
ஆர்யாவோட ஒரே சண்டை தான் வருது..செட் ஆகுதேயில்ல..! மனம்திறந்து பேசிய நடிகர் சந்தானம்..!
ஆர்யாவோட ஒரே சண்டை தான் வருது..செட் ஆகுதேயில்ல..! மனம்திறந்து பேசிய நடிகர் சந்தானம்..!
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களில் முன்னணியில் விளங்கிய சந்தானம், தற்போது ஹீரோயிசத்தையும் வெற்றிகரமாக செய்து வருகின்றார். “லொள்ளு சபா” மூலம் மக்கள் மனதில் அறிமுகமாகி, அஜித், விஜய், ரஜினி, தனுஷ் மற்றும் சிம்பு எனப் பல நட்சத்திரங்களின் படங்களில் அவருடைய காமெடி காட்சிகள் கண்ணீருடன் சிரிக்க வைத்திருக்கின்றன.அதனைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகர் என்ற கட்டுப்பாட்டைத் தாண்டி, ஹீரோவாக நடிப்பதற்கான சாகசத்தில் களமிறங்கி, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘தில்லுக்குத் துட்டு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றியைக் கண்டார். தற்போது ‘DD Next Level’ எனும் புதிய திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்வதற்குத் தயாராக இருக்கின்றார்.”DD Next Level” திரைப்படம் மே 16ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரொமோஷன்களில் கடந்த சில நாட்களாக சந்தானமும், தயாரிப்பாளராக செயல்பட்டுள்ள நடிகர் ஆர்யாவும் தீவிரமாக ஊடக சந்திப்புக்களில் கலந்து கொண்டுவருகின்றனர்.இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சந்தானமும் ஆர்யாவும் கலந்துகொண்டு, படத்திற்காக எடுத்த சிரமங்கள் மற்றும் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் போது, சந்தானம் நடிகர் ஆர்யாவைப் பற்றிக் கூறிய சில வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன் போது அவர் கூறியதாவது, “ஆர்யாவும் நானும் நண்பர்களா இருக்கும் போது எதுவும் பிரச்சனை கிடையாது. ஆனால் அவன் தயாரிப்பாளரா இருக்கும்போது… சண்டை வருதுப்பா! சில நேரங்களில் அவன் ரொம்ப கோபமடைவான். பெரிய சண்டையாகிவிடுமானால், நானே கிளம்பி ஈஷா யோகா சென்டருக்கே போயிடுவேன்.” என்றார்.மேலும், “உடனே எனக்கு போன் பண்ணுவான். ‘சத்குரு கிட்ட காசு வாங்கி கொடுன்னு கேட்பான். நான் ஷாக் ஆகிட்டே ‘எப்படிடா அவர்கிட்ட காசு வாங்க முடியும் என்று கேட்டா, ‘நீ அங்கதானே போற, அவர்கிட்ட காசு வாங்கி கொடுத்து, புரடியூசர் என்று அவர் பெயர் போட்டுக்கோ! என்று சொல்லுவான்” எனக் கலகலவென்று கூறியிருந்தார் சந்தானம்.