தொழில்நுட்பம்

இந்தியாவில் விற்பனைக்கு வரும் ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்… விலை எவ்வளவு தெரியுமா?

Published

on

இந்தியாவில் விற்பனைக்கு வரும் ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்… விலை எவ்வளவு தெரியுமா?

சமூக வலைதள நிறுவனமான மெட்டா ஆதரவுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ள ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளன. இந்த அதிநவீன கண்ணாடிகளின் ஆரம்ப விலை ரூ.29,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடிகளில் உள்ளமைக்கப்பட்ட குரல் மூலம் இயங்கும் மெட்டா ஏ.ஐ அம்சம் உள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் தொலைபேசியைத் தொடாமலேயே புகைப்படங்கள் எடுப்பது (அ) நேரலை ஒளிபரப்பு செய்வது போன்ற பல்வேறு வசதிகளைப் பெற முடியும். தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் புதுமையான கேட்ஜெட்களை விரும்புவோர் மத்தியில் இந்த புதிய ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகள், எஸ்.எம்.எஸ். அனுப்புவது, அழைப்புகள் மேற்கொள்வது முதல் புகைப்படங்கள் எடுப்பது வரை பல்வேறு செயல்பாடுகளைக் கைகளை பயன்படுத்தாமல் மேற்கொள்ள பயனர்களுக்கு உதவுகின்றன. இதன்மூலம், பயனர்கள் தங்கள் செயலிகளுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் அதேநேரத்தில் கைகளை வேறு பணிகளில் ஈடுபடுத்தவும் முடியும்.இந்த கண்ணாடிகள், பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு லென்ஸ் உற்பத்தியாளரான எஸிலோர்லக்ஸோட்டிகாவுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்களைக் கவரமெட்டா நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகள் மூலம் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் தொழில்நுட்ப புரட்சியின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகின்றன.இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் முதலில் 2023-ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் நேற்று  (மே.13) விற்பனைக்கு வந்துள்ளன. ரே-பான் இந்தியாவின் வலைத்தளத்தில் இந்த கண்ணாடிகளின் பல்வேறு வடிவமைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட மாடல்களின் விலை ரூ.35,700 ஆகவும் உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகளைப் பயன்படுத்த, பயனர்கள் அவற்றை தங்கள் ஸ்மார்ட்போனுடனும் மெட்டா ஏஐ செயலியுடனும் இணைக்க வேண்டியது அவசியம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version