இந்தியா
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலத்த பாதுகாப்பு!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலத்த பாதுகாப்பு!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அவருக்கு குண்டு துளைக்காத கார் என்பன வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சங்கருக்கு ஏற்கனவே மத்திய ரிசர்வ் பொலிஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் z-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.