இலங்கை

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லையாம்!

Published

on

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லையாம்!

   இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என கூறியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் .

இது தொடர்பில் சமூக ஊடக பதிவில் அலிசப்ரி ,

Advertisement

இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால்   திகைப்பும் கவலையுமடைந்துள்ளேன்.

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை.அந்த கூற்று ஆதாரமற்றது மாத்திரமல்ல மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எந்தவொருசர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப்படுகொலை குற்றவாளியாக கண்டறியவில்லை.

Advertisement

இலங்கையில் நடந்தது துன்பகரமான ஆனால் கனடா உட்பட 30 க்கும் அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இராணுவ நடவடிக்கை.

அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எந்த சமூகத்திற்கும் எதிரானது இல்லை .

போரின் போது அப்பாவிகள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மனவேதனையை ஏற்படுத்தினாலும்,மோதலை இனப்படுகொலை என சித்தரிப்பது உண்மையை சிதைப்பது மாத்திரமல்லாமல், அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

கனடாவில் வாக்குவங்கியை நோக்கமாக கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம் என்றும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கனடாவில் அமைகப்பட்டுள்ள தமிழின படுகொலை நினைவு தூபி ந்தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version