சினிமா
“ஒரு சிறிய அதிசயம் வந்துவிட்டது”…!மகன் பிறந்த செய்தியை பகிர்ந்த சீரியல் நடிகை தர்ஷனா…!
“ஒரு சிறிய அதிசயம் வந்துவிட்டது”…!மகன் பிறந்த செய்தியை பகிர்ந்த சீரியல் நடிகை தர்ஷனா…!
ஜீ தமிழில் ஒளிபரப்பான “நீதானே எந்தன் பொன்வசந்தம்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாவனர் தர்ஷனா. இவர் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதினை வென்று தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார். தற்போது சமூக வலைத்தளபக்கத்தில் பதிவு ஒன்றி பதிவிட்டுள்ளார். அதாவது தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். தர்ஷனா “நீதானே எந்தன் பொன்வசந்தம்” என்ற தொடர் மூலம் தமிழில் சின்னத்திரையில் அறிமுகமாகி அதே டீவி சானலில் ஒளிபரப்பான “கனா”தொடரிலும் கதாநாயகியாக நடித்து தமிழ்ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்தார். பல் மருத்துவரான இவருக்கு நடிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக சின்னத்திரையில் நடிப்பதற்கு வந்தார். நடிப்பது, போட்டோ ஷுட் என பிஸியாக இருந்த இவர் அபிஷேக் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்த பின்பு சீரியலிருந்து விலகி விட்டார் அத்தோடு சிலமாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக உள்ளதனை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.