பொழுதுபோக்கு
கைது செய்யப்படும் முத்து; திட்டம் போட்டு பழிவாங்கிய அருண்: மீனா என்ன செய்ய போகிறார்?
கைது செய்யப்படும் முத்து; திட்டம் போட்டு பழிவாங்கிய அருண்: மீனா என்ன செய்ய போகிறார்?
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து அருணின் வண்டியில் காரை விட்டது பெரிய பிரச்னையாக வெடித்துள்ள நிலையில், அருண் வீட்டில் கலாட்டா செய்தததற்காக, முத்துவை போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நடந்த எபிசோட்டில், ரோஹினி முத்துவின் கார் சாவியை சிட்டியிடம் கொடுக்க, அவன், முத்துவின் காரில் பிரேக் வயரை கட் செய்துவிட்டான். பிரேக் இல்லாத வண்டியை ஓட்டி சென்ற முத்து ஸ்கூல் பிள்ளைகள் வரும் ஆட்டோவில் மோதாமல் இருக்க, தவறான ரூட்டில் சென்று போலீஸ் வண்டியில் மோதிவிடுகிறார். ஏற்கனவே கான்ஸ்டபிள் அருண், முத்து இடையே மோதல் இருப்பதால், இதனை பயன்படுத்தி அருண் முத்துவை பழிவாங்கிவிட்டார்.இந்த சம்பவம் காரணமாக முத்துவின் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்ட நிலையில், மீனா, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசி, இந்த பிரச்னையை முடிக்க முயற்சி செய்கிறார். இதில் மீனாவுக்கு உதவுவதாக கூறிய இன்ஸ்பெக்டர், அருண் பிரச்னைக்கு போகவே கூடாது என்று சொல்லி முத்துவிடம் கூறியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீனா, போலீஸ் ஸ்டேஷனில் முத்து மீது எந்த தவறும் இல்லை என்று கெஞ்சி பேசிக்கொண்டிருக்க, இந்த பக்கம் முத்து தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு அருண் வீட்டில் கலாட்டா செய்கிறார். இதனை அருண் வீடியோ எடுத்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க, அதுவரை மீனாவுக்காக முத்துவின் லைசன்ஸை கொடுப்பதாக கூறிய போலீஸ் அருண் கொடுத்த வீடியோவை பார்த்துவிட்டு, இது அட்டம்டூ மர்டர், இதனால் உன்னை உள்ளதான் வைக்கனும் என்று சொல்லி முத்துவை கைது செய்ய, அருண் மகிழ்ச்சியில் ரசிக்கிறார் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இதனால் முத்து அடுத்து எப்படி வெளியில் வருவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.