இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் ; விசாரணைக்கு 10 பேரடங்கிய குழு நியமனம்

Published

on

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் ; விசாரணைக்கு 10 பேரடங்கிய குழு நியமனம்

  கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை National Child Protection Authority தனி விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க,

Advertisement

மாணவியின் மரணம் தொடர்பில் வீசரணை நடத்த பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஒருவர், பாடசாலை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதால், மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.

அந்த மாணவிக்கு தனியார் வகுப்பிலும் மன உளைச்சல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

Advertisement

மாணவியின் மரணத்திற்கு நீதிகோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , நாடளுமன்றத்திலும் மாணவிக்கு நீதிகோரி விவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version