இலங்கை

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Published

on

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கண்டி – நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்; 
கண்டி – நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்திருந்த நிலையில் சுமார் 40 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் நுவரெலியா, கண்டி, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கொத்மலை பேருந்து விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
—-

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version