இலங்கை

சம்பளம் வழங்கப்படாததால் கடும் அவதியில் ஊழியர்கள்

Published

on

சம்பளம் வழங்கப்படாததால் கடும் அவதியில் ஊழியர்கள்

இ.போ.ச. வவுனியா சாலையில் சம்பவம்

இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலை ஊழியர்களுக்கான மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

வவுனியா சாலையில் பணிபுரியும் சாரதிகள், காப்பாளர்கள், பொறியியலாளர்கள் ஆகியோருக்கான ஊதியமே இதுவரை வழங்கப்படவில்லை.

மாதாந்தம் 8ஆம் திகதி அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும் நிலையில், இந்த மாதத்துக்கான சம்பளத் திகதியில் இருந்து, கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் கடக்கின்ற போதிலும் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. பண்டிகைக்காலம் இடம்பெற்றுவரும் நிலையில், தமக்கான சம்பளம் வழங்கப்படாமையால் தாம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version