சினிமா
திரையுலகத்தை கதறவிட்ட அனிருத்..ஒரே ஆண்டில் குவியும் 5 பட வாய்ப்புக்கள்..!
திரையுலகத்தை கதறவிட்ட அனிருத்..ஒரே ஆண்டில் குவியும் 5 பட வாய்ப்புக்கள்..!
தமிழ் சினிமாவின் ‘ராக்கிங்’ இசையமைப்பாளராக ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். தனது இசையில் ஹிப் மற்றும் ஹிரோயிசம் மூலமாக திரையுலகை கலக்கித் திரைக்கதை முழுவதும் உயிரூட்டும் இவர், இந்த வருடம் ஐந்து படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவுள்ளார்.இந்த 2025ம் ஆண்டு முழுவதும் தமிழ் சினிமாவை இசையால் ஆட வைக்கும் திட்டத்துடன் தயாராக உள்ளார் அனிருத். இப்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ள ‘கிங்டம்’, ‘கூலி’, ‘மதராஸி’, ‘LIK’ மற்றும் ‘ஜனநாயகன்’ ஆகிய பெரிய திரைப்படங்கள் அனைத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.2025ம் ஆண்டு தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு இசைத் திருவிழா போலவே அமையப்போகின்றது. ஒரே வருடத்தில் 5 பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத் இசையமைப்பதென்பது சாதாரண விடயம் இல்லை. எனினும் அனிருத் அதை சிம்பிளாக செய்து முடித்துள்ளார். அத்தகைய அனிருத்தின் இசையை இந்த வருடம் வெளியாகும் படங்களில் கேட்பதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.