இலங்கை

நீண்ட தூர பேருந்து சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Published

on

நீண்ட தூர பேருந்து சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

 நீண்ட தூர பேருந்து சேவைகளுக்காக பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 6 மணி நேரத்திற்கும் மேலான எந்தவொரு நீண்ட தூர பயணத்திற்கும், 2 வெவ்வேறு பேருந்து சாலைகளின் ஒருங்கிணைப்புடன் 2 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன அறிவித்துள்ளார்.

Advertisement

சாரதிகளின் சோர்வைக் குறைத்து சிறந்த மேற்பார்வையை உறுதி செய்வதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து துறைசார் அதிகாரிகளுடன் நேற்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை  , இரவு நேரங்களில் பயணிக்கும் நீண்ட தூர சேவை பேருந்துகளை விசேட சோதனைக்கு உட்படுத்துவதற்கு  பொலிஸார்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version