சினிமா
பிரதீப் ரங்கநாதன் திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை..!
பிரதீப் ரங்கநாதன் திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை..!
தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து “லவ் டுடே ” எனும் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் இந்த ஆண்டு வெளியாகிய “டிராகன் ” படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். குறுகிய கால இடைவெளியில் பான் இந்திய ஸ்டாராக வளர்ந்திருக்கும் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “lik ” மற்றும் “dude” படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்தினை கேதீஸ்வரன் இயக்கி வருவதுடன் மைத்ரி மூவி மேக்கேர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. மேலும் இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் தற்போது “dude ” படம் அக்டோபர் மாதம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ் ,தெலுங்கு ,கன்னடா மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே தேஜ் எனும் நடிகரின் படம் “dude ” எனும் பெயரில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே அங்கு படத்தின் பெயரை வைப்பதில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.