பொழுதுபோக்கு
பெண்ணுக்கு தெரியாமல் தாலி கட்டிய ஹீரோ: அண்ணணுக்கு அண்னையர் தினம்: மருமகன் பற்றி உண்மை தெரியவருமா?
பெண்ணுக்கு தெரியாமல் தாலி கட்டிய ஹீரோ: அண்ணணுக்கு அண்னையர் தினம்: மருமகன் பற்றி உண்மை தெரியவருமா?
கார்த்திக் குறித்து அறியும் சிவனாண்டி.. சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிய வருமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியும் கார்த்தியும் விசா ஆபிஸிற்கு கிளம்பி சென்ற நிலையில் இன்று, ரேவதி வெளிநாடு கிளம்ப தயாராகுகிறாள். அதே போல் சிவனாண்டி ஊருக்கு வந்திருக்கிறான். அப்போது அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனியின் அருகே கார்த்திக் ஒரு வெள்ளைக்காரனுடன் கை கொடுத்து கொண்டு இருப்பது போல் ஒரு பேனர் இருக்கிறது.இதை பார்த்த சிவனாண்டி ஷாக் ஆகி விசாரிக்க டிரைவராக இருப்பது ராஜா இல்ல கார்த்திக் என்ற விஷயம் தெரிய வருகிறது, ராஜசேதுபதியின் பேரன் என்ற விஷயத்தையும் அறிகிறாள். உடனே ஊருக்கு கிளம்புகிறான். ஊருக்கு வந்ததும் சந்திரகலாவை சந்தித்து மொத்த உண்மைகளையும் உடைக்கிறான். அதுமட்டுமின்றி சந்திரக்கலாவை வைத்து சாமுண்டீஸ்வரிக்கு உண்மைகளை தெரியப்படுத்த திட்டம் போடுகிறான்.அவனது திட்டத்தின்படி வீட்டிற்கு வந்த சந்திரகலா நீ வா அக்கா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் என்று சாமுண்டீஸ்வரியை கார்த்தியின் ஆபிஸிற்கு அழைத்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நண்பர்களாகும் எதிரிகள்.. வெற்றி கட்டிய தாலியால் அதிர்ச்சியாகும் துளசி – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட் கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசி கழுத்தில் தாலிகட்டிய நிலையில் இன்று, துளசி கழுத்தில் தாலி எப்படி வந்தது என தெரியாமல் ஓரிடத்தில் உட்கார்ந்து கலங்கியபடி இருக்க வெற்றி தாலி கட்டியது நான் தான் என்று சொல்ல முடிவெடுத்து கிளம்பி வருகிறான். அப்போது முனுசாமியும் ஈஸ்வரமூர்த்தியும் இதுவரை எதிரிகளாக இருந்த நாங்கள் சம்மந்தியாக போறோம் என்று கூறுகின்றனர்.அதனைத் தொடர்ந்து வெற்றிக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் என அறிவிக்கின்றனர். இதனால் வெற்றி முதலில் இவங்களுக்கு புரிய வைக்கனும், அதுக்கப்புறம் துளசியிடம் உண்மையை சொல்லி விடலாம் என முடிவெடுக்கிறான். அடுத்து அஞ்சலி மற்றும் மகேஷ் கோவிலில் இருந்து கிளம்புகின்றனர், துளசியும் வீட்டிற்கு வந்து கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து பார்த்து பீல் செய்கிறாள். இதை பார்த்த தியா என்ன இது எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்.துளசி அது தாலி பெரிய பொண்ணு ஆனால் தான் உனக்கு கிடைக்கும் என சொல்கிறாள். இதனை தொடர்ந்து லட்சுமி கோவிலில் கொடுத்த பிரசாதத்தை தாலியில் வைத்து கொள்ள சொல்லி எல்லாருக்கும் கொடுக்கிறாள். அப்போது தியா இது தாலி தானே? துளசி அம்மா கழுத்திலும் இருக்கு அவங்களுக்கும் கொடுங்க என்று சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.மறுபக்கம் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் எல்லாரும் முனுசாமி வீட்டிற்கு கிளம்ப அப்போது கோவில் நிர்வாகிகள் வீட்டிற்கு வந்து அம்மன் கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை என்று சொல்கின்றனர். ஏதோ அபசகுணம் போல் தெரிகிறது என்று சொல்லி வருந்துகின்றனர். ஈஸ்வரமூர்த்தி கோவிலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்த்தால் யார் எடுத்து என்று தெரிந்து விடும். நாளைக்கு அந்த முருகனை சிசிடிவி காட்சிகளை எடுத்துக்கிட்டு வீட்டிற்கு வர சொல்லுங்க என்று சொல்கிறார். இதனால் வெற்றி பயப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அண்ணனுடன் அன்னையர் தினத்தை கொண்டாடும் தங்கைகள்.. பஞ்சாயத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் மாலதி டீச்சர் அறிமுகமாக வைஜெயந்தி அந்த டீச்சர் அறிவழகனுடன் நெருங்கிய பழக தொடங்கியதும் அவளை கொன்னுடு என்று வெங்கடேஷிடம் சொல்லிய நிலையில் இன்று, இசக்கி இன்னைக்கு அன்னையர் தினம் என்று சொல்லி பாக்கியத்துக்கு வாழ்த்து சொல்ல பாக்கியம் பரணிக்கு போன் செய்து வாண்டடாக வாழ்த்து சொல்ல சொல்கிறாள். பரணி அம்மா நான் தான் போன் பண்ணி உனக்கு வாழ்த்து சொல்லணும், நீயா போனை போட்டு வாழ்த்தை கேட்டு வாங்க கூடாது என்று கலாய்த்து விட்டு வாழ்த்து சொல்கிறாள். இதையடுத்து பரணி இன்னைக்கு அன்னையர் தினம்.. உங்க அத்தைக்கு ஏதாவது செய்யலாமா என்று கேட்க தங்கைகள் அண்ணன் தான் எங்களுக்கு அண்ணா மாதிரி என்று சொல்கின்றனர். இதனால் பரணி அப்போ சண்முகத்தை வைத்து எதாவது செய்யலாம் என்று திட்டம் போடுகின்றனர்.எல்லாரும் சேர்ந்து கேக் வாங்கி பஞ்சாயத்தில் வைத்து சண்முகத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர், இசக்கியையும் இந்த கொண்டாட்டத்திற்கு வர வைக்கின்றனர். சண்முகம் தங்கைகள் கொடுத்த சர்ப்ரைஸால் எமோஷனலாகி நிற்கிறான். தங்கைகள் ஒவ்வொருவரும் சண்முகத்தை பற்றி பெருமையாக பேசுகின்றனர், இறுதியாக இசக்கி அண்ணனை பற்றி பேச செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.