இலங்கை
பேக்கரி தொழிலாளி மர்ம மரணம் ; தீவிரப்படுத்தப்படும் பொலிஸ் விசாரணைகள்
பேக்கரி தொழிலாளி மர்ம மரணம் ; தீவிரப்படுத்தப்படும் பொலிஸ் விசாரணைகள்
களுத்துறை வடக்கின் வஸ்கடுவ பகுதியில் பேக்கரி தொழிலாளி ஒருவர் படிக்கட்டு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மதுகம, அகலவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பேக்கரியின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து,
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் வந்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கினர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் தலைமையிலான குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.