சினிமா
வாட்ஸ் அப்பில் என்னை மிரட்டுகிறார்கள்..! நடிகை கௌதமி பரபரப்பு புகார்..!
வாட்ஸ் அப்பில் என்னை மிரட்டுகிறார்கள்..! நடிகை கௌதமி பரபரப்பு புகார்..!
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் நடித்து ரசிகர்கள் மனதில் மிகவும் பரிச்சயமான நடிகையாக திகழ்கின்ற கௌதமி, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளார்.தன்னை நோக்கி மிரட்டலான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன எனவும் வாட்ஸ் அப் குழு மூலம் சிலர் சட்டத்துக்கு விரோதமான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும், அந்த குழுவில் இருப்பவர்கள் வழக்கறிஞர் என்ற பெயரில் நடந்து கொள்கிறார்கள் என கௌதமி தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து நடிகை கௌதமி, சென்னை காவலாளர் ஆணையகத்தில் நேரில் சென்று புகார் மனு அளித்திருக்கிறார். அந்த மனுவில், தனக்கு எதிராக திட்டமிட்டு நடந்துகொள்கின்ற குழுவினர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.அதன்போது கௌதமி, “நான் எந்தவொரு சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. என் சொந்த நிலம் தொடர்பாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்துள்ளேன். ஆனால் சிலர் இதற்கு எதிராக செயல்பட்டு, என்னை சிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்,” என நடிகை கௌதமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இது மட்டுமல்லாமல், தனது நிலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானங்களை இடிக்கச் சொல்வதற்காக சிலர் முறையற்ற முறையில் 96,000 ரூபாய் பணம் கோரி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். புகாரில் மிக முக்கியமான விடயமாக ஒருவர் தன்னை வழக்கறிஞராக அறிமுகப்படுத்தி, சட்ட நடவடிக்கையை எச்சரிக்கும் வகையில் தொடர்ந்து மெசேஜ்கள் அனுப்புவதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல் துறையினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர். விசாரணையின் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.