டி.வி
வாழ்க்கையில் அழகான புதிய அத்தியாயம்; அம்மா ஆன சந்தோஷத்தில் பிரபல சீரியல் நடிகை; வைரல் போஸ்ட்!
வாழ்க்கையில் அழகான புதிய அத்தியாயம்; அம்மா ஆன சந்தோஷத்தில் பிரபல சீரியல் நடிகை; வைரல் போஸ்ட்!
தமிழ் சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை தர்ஷனா அசோகன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், தனது இயல்பான நடிப்பாலும், வசீகரமான தோற்றத்தாலும் குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.இந்நிலையில், தர்ஷனா அசோகன் சமீபத்தில் அழகான ஆண் குழந்தைக்குத் தாயாகி தனது வாழ்க்கையில் ஒரு புதிய, அழகான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவுடன் பகிர்ந்துள்ளார். “எங்கள் இதயங்கள் விரிவடைந்துள்ளன, எங்கள் உலகம் முற்றிலும் மாறிவிட்டது. ஒரு சிறிய அதிசயம் வந்து எங்கள் வாழ்க்கையை எல்லையற்ற மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. நாங்கள் நன்றியுணர்வால் நிரம்பி வழிகிறோம், எங்கள் மகனுடன் வரவிருக்கும் அழகான சாகசங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகப் பிரபலங்கள் பலரும் தர்ஷனாவுக்கும் அவரது குழந்தைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் வாழ்த்து மழையாகப் பொழிந்து வருகிறது.A post shared by Dr.Dharshana ashokan (@dharshana_ashokan)கடந்த 2020 ஆம் ஆண்டு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷனா அசோகன். அதில் அவர் ஏற்று நடித்த அனு சூர்யபிரகாஷ் என்ற கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா’ சீரியலில் அன்பரசி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.தற்போது தாய்மை என்னும் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள தர்ஷனாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும், அவர் எப்போது மீண்டும் திரையில் தோன்றுவார் என்பதையும் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.