நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 14/05/2025 | Edited on 14/05/2025

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கடந்த ஆண்டு வெளியான சீரிஸ் ‘ஹார்ட் பீட்’. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்திருந்தனர். ‘ஏ டெலி பேக்டரி’ நிறுவனம் தயாரித்திருந்த இந்த சீரிஸை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். 

இந்த சீரிஸின் இரண்டாம் சீசன் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் நடித்துள்ளவரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவருமான யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாரால் நடத்தப்பட்ட ரசிகர்கள் உரையாடலின் போது இந்த வெளியீட்டுத் தேதியை யோகலட்சுமி தெரியப்படுத்துள்ளார். 

Advertisement

சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதில் யோகலட்சுமி வெளியீட்டு தேதியை மே 22 என்று குறிப்பிட்டபோது ரசிகர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இந்த செய்தி வைரலானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜியோஹாட்ஸ்டார் வெளியீட்டு தேதியுடன் புதிய டைட்டில் டிராக் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த சீரிஸ் வெளியாகிறது.