பொழுதுபோக்கு

‘அடி ஆடு பூங்கொடியே…’ ரஜினியுடன் ஆடிப் பாடிய இந்தச் சிறுமி இன்று பெரிய பாடகி; அடையாளம் தெரிகிறதா?

Published

on

‘அடி ஆடு பூங்கொடியே…’ ரஜினியுடன் ஆடிப் பாடிய இந்தச் சிறுமி இன்று பெரிய பாடகி; அடையாளம் தெரிகிறதா?

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக பல ஹிட் பாடல்களை பாடியுள்ள் ஒரு பாடகி, தனது சிறுவயதில், ரஜினிகாந்தின் கையை பிடித்துக்கொண்டு ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடகி யார் என்பதை பார்ப்போமா?1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன், நடிப்பில் உச்சம் தொட்டார். தற்போது 70 வயதை கடந்துள்ள அவர், இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.தனது ஆரம்ப காலத்தில், பல குழந்தை நட்சத்திரங்களுடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார், அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயே கேட்ட குரல் உள்ளிட்ட படங்களில் நடிகை மீனாவுடன் இணைந்து நடித்த ரஜனிகாந்த் பின்னாளில் அவருடனே ஜோடியாக நடித்திருந்தார். அந்த வகையில் 1980-ம் ஆண்டு வெளியாக காளி என்ற படத்தில் ஒரு முன்னணி பாடகி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் கவிஞர் வைரமுத்து பாடல் ஆசிரியராக அறிமுகமானார். இந்த படத்தில் காளி பத்ராளி என்ற பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். மற்ற 4 பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்த நிலையில், அதில் ஒரு பாடலில், பாடகி ஒருவர் ரஜினிகாந்தின் கையை பிடித்துக்கொண்டு ஆடியிருப்பார். அந்த பாடல் தான் ‘அடி ஆடு பூங்கொடியே’ என்ற பாடல்.இந்த பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்த நிலையில், இந்த பாடலில் ரஜினிகாந்துடன் கைகோர்த்து ஆடிய அந்த சிறுமி, பாடகி அனுராதா ஸ்ரீராம். இந்த படத்தின்போது ரஜினிகாந்த் அனுராதாவை தூக்கி வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தமிழ், சிங்களம், கன்னடா, இந்தி, பெங்காலி, தெலுங்கு,  மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் அனுராதா ஸ்ரீராம்.1995-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் பாடகியான தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில், ‘’மலரோடு மலரிங்கு, இது நம்ம பூமி உள்ளிட்ட 2 பாடல்களை பாடியிருந்தார். தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வித்யா சாகர், சிற்பி, தேவா, யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அனுராதா ஸ்ரீராம், கடைசியாக 2020-ம் ஆண்டு தமிழில் வெளியான எட்டித்திக்கும் பற என்ற படத்தில் பாடல் பாடியிருந்தார். திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் பாடல்களை பாடியுள்ளார்., தற்போது டிவி இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version