இலங்கை

அழிவை நெருங்கியுள்ள பூமி ; ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Published

on

அழிவை நெருங்கியுள்ள பூமி ; ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

பூமி அழிவது குறித்து ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.

இதனை  பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முறையைச் சோதித்துள்ளனர்.

Advertisement

அதில், பூமியின் ஆக்சிஜன் சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் காலியாகிவிடும் எனத் தெரியவந்துள்ளது. அவ்வாறு ஆக்சிஜன் அனைத்தும் காலியானால் அதன் பிறகு உயிர்வாழ்வதே சாத்தியமற்றதாக மாறிவிடும்.

இது தொடர்பாக ஜப்பானின் டோக்கியோவில் உள்ள டோஹோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கசுமி ஓசாகி கூறுகையில்,

“சூரியன் மற்றும் கார்பனேட்-சிலிகேட் சுழற்சி எப்படி இருக்கிறது என்பதை வைத்தே பல ஆண்டுகளாக பூமியின் எதிர்காலம் குறித்து விவாதித்து வருகிறோம்.

Advertisement

அதில் நாம் முக்கியமாகக் கவனிப்பது வளிமண்டலத்தில் உள்ள CO2 அளவு தொடர்ந்து குறைவதும்.. பூமி தொடர்ச்சியாக வெப்ப மயமாவதும் ஆகும்.

அதிக வெப்பம் காரணமாக ஒளிச்சேர்க்கை (photosynthesis) பாதிக்கப்படும். அதேபோல வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறையும்.

இதனால் பூமியின் பயோஸ்பியர் 2 பில்லியன் ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

Advertisement

மேலும் வரும் காலங்களில் பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவுகளும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். பூமியில் ஆக்சிஜன் அளவுக்குக் குறையும்போதும் உயிர்கள் வாழ முடியும் என்ற போதும் அதில் தற்போதைய நிலையில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பூமி ஒரு பில்லியன் ஆண்டுகளில் அழியும் எனக் கணித்துள்ளனர்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version