பொழுதுபோக்கு
இந்து அமைப்புகள் எதிர்ப்பு எதிரொலி: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ‘கோவிந்தா’ பாடல் நீக்கம்!
இந்து அமைப்புகள் எதிர்ப்பு எதிரொலி: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ‘கோவிந்தா’ பாடல் நீக்கம்!
நடிகர் சந்தானம் நடிப்பில் நாளை (மே-16) வெளியாக உள்ள டிடி நெக்ஸ் லெவல் திரைப்படத்தில் இடம் பெற்ற கிஸ்ஸா 47 பாடலை நீக்க வேண்டும் என்று கூறி, திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து தற்போது படத்தில் இருந்து அப்பாடல் நீக்கப்பட்டுள்ளது.தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ‘தில்லுக்கு துட்டு’ திரைப்பட வரிசையில் 4-வது பாகமாக வெளியாகும் இந்த படத்தை, எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்துடன் கீர்த்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.இப்படம் வரும் மே 16ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸா 47’ என்ற ராப் பாடலில் புகழ்பெற்ற பக்தி பாடலான ‘ஸ்ரீனிவாச கோவிந்தா’ வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் மற்றும் அரசியல்வாதியான பானுபிரகாஷ் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.மேலும் பாடலை உடனடியாக நீக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பான சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட் நிலையில், ஸ்ரீனிவாச கோவிந்தா பாடல் ஆன்லைனிலும், திரைப்படத்திலும் இருந்து நீக்கப்படாவிட்டால், நாங்கள் அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் இழப்பீடு கோருவோம்” என்று கூறியிருந்தார். இந்த பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே, தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இருந்து கோவிந்த பாடல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தானம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இதே நாளில் சந்தானம் போலே காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சூரி நடிப்பில் மாமன், யோகி பாபு நடிப்பில் ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.