இலங்கை

இலங்கையில் 26 சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தயாராகும் அரசாங்கம்!

Published

on

இலங்கையில் 26 சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தயாராகும் அரசாங்கம்!

ஜனாதிபதி செயலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, 26 சொகுசு வாகனங்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (15) ஏலம் விடப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விற்பனை செய்யப்பட உள்ள இந்த வாகனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஆகும், இவற்றுக்கான ஏல நடைமுறை இன்று (14) முடிவடைந்தது.

Advertisement

இதற்கமைய  நாளை ஏலம் விடப்படும் வாகனங்களில் ஒரு BMW காரும் அடங்கும். 01 கார், 02 ஃபோர்டு எவரெஸ்ட் ஜீப்புகள், 01 ஹூண்டாய் டெர்ரகன் ஜீப், 02 லேண்ட் ரோவர் ஜீப்புகள், 01 மிட்சுபிஷி மொன்டெரோ, 03 நிசான் பெட்ரோல் கார்கள், 02 நிசான் மோட்டார் கார்கள், 01 போர்ஷே கெய்ன், 05 சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப்புகள், 01 லேண்ட் குரூசர் சஹாரா ஜீப், 06 V8கள், மற்றும் 01 மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பேருந்து ஆகியவை ஏலம் விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version