பொழுதுபோக்கு
உண்மையை உடைத்த ஹீரோ; அதிர்ச்சியில் வில்லன் கோஷ்டி: ரகசியம் வெளிவருமா?
உண்மையை உடைத்த ஹீரோ; அதிர்ச்சியில் வில்லன் கோஷ்டி: ரகசியம் வெளிவருமா?
மாலதியின் என்ட்ரி.. சண்முகம் கொடுத்த அட்வைஸ், பூவை கொடுத்து சிக்கி கொண்ட அறிவழகன்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் மாலதி டீச்சரை வைத்து வைஜெயந்தி ஒரு திட்டத்தை தீட்டிய நிலையில் இன்று, இசக்கி பஞ்சாயத்தில் அண்ணனை பற்றி பேச போக சண்முகம் கண்ணை காட்ட எலெக்ட்ரிஷியன் மைக்கை ஆப் செய்து விடுகிறார். இதனால் இசக்கி பேச முடியாமல் போக வருத்தமடைகிறாள். இதனை தொடர்ந்து பரணி நீ பண்ணது தப்பு என்று சண்முகத்துடன் சண்டையிட சண்டை அப்படியே ரொமான்ஸாகிறது. பரணி பூ கேட்க சண்முகம் வாங்கி கொடுப்பதோடு தலையில் வைத்தும் விடுகிறான்.அடுத்து இசக்கி வருத்தத்தில் இருக்க இங்கே மாலதி டீச்சர் படு மாடர்னாக ஸ்டைலாக ட்ரெஸ் அணிந்து சண்முகம் வீட்டிற்கு பூ பழத்துடன் வருகிறாள். நான் புதுசா வந்திருக்க டீச்சர் என்று சொன்னதும் சண்முகம் பசங்களுக்கு பாடம் சொல்லி தர டீச்சர் இப்படி டிரஸ் பண்ணலாமா? என்று அட்வைஸ் கொடுக்கிறான். அடுத்த நாள் காலையில் டீச்சர் ஸ்கூலுக்கு வர கிளாமராக வந்த அவரை பார்த்து எல்லாரும் ஜொள்ளு விடுகின்றனர். டீச்சர் அறிவழகன் யார் என்று விசாரித்து அவனிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு கை கொடுக்கிறாள்.அப்போது கனி செடியில் இருக்கும் பூவை பறித்து கொடுக்க சொல்லி கேட்க அறிவழகன் பறிக்க ரத்னா வர கனி பயந்து ஓடி விடுகிறாள். மாலதி டீச்சர் அந்த பூவை வாங்கி கொண்டு தாங்க்ஸ் சார் என்று சொல்ல ரத்னா இதை பார்த்து டென்ஷன் ஆகிறாள். அறிவழகன் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தாலியை கழட்டி எறிய துணிந்த துளசி.. வெற்றி செய்த தில்லாலங்கடி வேலை – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரமூர்த்தி சிசிடிவி புட்டேஜ் கொண்டு வர சொல்லி இருந்த நிலையில் இன்று, தியா துளசி அம்மா கழுத்தில் தாலி இருப்பதாக சொன்னதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைய லட்சுமி துளசியிடம் வந்து தியா உன் கழுத்தில் தாலியை பார்த்ததாக உறுதியா சொல்றா.. என்ன விஷயம் என்று துணியை விலக்க துளசி கழுத்தில் தாலி இருக்க அதிர்ச்சி அடைகிறாள். ஆனால் துளசி கல்யாண தோஷம் இருப்பதால் சாமியார் மாப்பிள்ளை உன் கழுத்தில் தாலி கட்டுற வரைக்கும் இந்த கயிறு உன் கழுத்தில் இருக்கட்டும் என்று சொன்னதாக சொல்லி நம்ப வைக்கிறாள். இதை கேட்டதும் லட்சுமி நிம்மதி அடைகிறாள்.அடுத்து துளசி தியாவிடம் இனிமே இந்த தாலி சம்மந்தமாக யாரிடமும் எதுவும் பேச கூடாது என்று ஒரு கதையை சொல்லி குழந்தையை சம்மதிக்க வைக்கிறாள். அடுத்ததாக வெற்றியின் வீட்டில் எல்லாரும் கூடியிருக்க புட்டேஜுடன் கோவில் நிர்வாகிகள் வீட்டிற்கு வருகின்றனர். வெற்றியிடம் ஹார்ட் டிஸ்க்கை கொடுக்க அவன் வேண்டுமென்றே புட்டேஜ் அனைத்தையும் டெலீட் செய்து எல்லாம் அழிந்து விட்டதாக சொல்லி சமாளிக்கிறான்.அடுத்து ரேவதி கோவில் திருவிழா மூலமாக கிடைத்த பணத்தை தன்னுடன் வேலை செய்த குள்ளனுக்கு பிரித்து கொடுக்கிறாள். அதோடு முருகனுக்கும் பணத்தை கொடுக்க முருகன் வாங்க மறுக்கிறான். ரேவதி இந்த ஆர்டர் நல்லபடியாக முடிய நீயும் தான் காரணம் என்று பணத்தை கொடுக்க அவன் அந்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்து எல்லாரும் சந்தோசப்படுகின்றனர்.தொடர்ந்து கோவிலுக்கு வந்த துளசி இந்த தாலி ஏன் என் கழுத்துக்கு வந்தது? இது என் கழுத்தில் இருப்பது எனக்கு பிடிக்கவே இல்லை என்று கழட்டி வீச முயற்சி செய்ய அங்கு வந்த காமாட்சி அம்மா துளசியை தடுத்து நிறுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆபிசில் காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திக் எடுத்த திடீர் முடிவு – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டேஸ்வரியை அழைத்து கொண்டு கார்த்தியின் ஆபிஸ்க்கு வந்திருந்த நிலையில் இன்று, சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆபிஸ்க்குள் நுழைய அங்கு இளையராஜா பாஸாக சேரில் உட்கார்ந்திருக்க சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். சாமுண்டேஸ்வரி சந்திரக்கலாவை திட்டியபடி வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி சந்திரக்கலாவை திட்டி விட்டு கிளம்பி செல்ல கார்த்திக் சந்திரகலாவிடம் நான் ராஜசேதுபதியோட பேரன் தான்.இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்க தான் இங்க வந்திருக்கேன். உங்களால் முடிந்ததை பாருங்க என்று பதிலடி கொடுக்கிறான். அடுத்து கார்த்திக் வெளிநாடு செல்லும் ரேவதிக்கு ஒரு கிப்ட் வாங்கி வந்து கொடுக்கிறான். இந்த சமயத்தில் அபிராமி போன் செய்து ரேவதியை அழைத்து கொண்டு கோவிலுக்கு வர சொல்கிறாள். சித்தர் ஒருவர் உங்க பையன் மனைவியை 5 வருஷம் பிரிந்து இருக்க வேண்டி இருக்கும் என்று சொன்னதாக சொல்லி பரிகாரம் ஒன்றை செய்ய சொல்கிறாள்.இதனால் ரேவதி கார்த்தியிடம் நீங்க தான் உங்க அம்மா கிட்ட சொன்னீங்களா என்று சத்தம் போடுகிறாள். பிறகு கார்த்திக் இந்த கும்பாபிஷேகம் முடிந்ததும் நானே உண்மையை சொல்லி விட போகிறேன் என்று முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.