சினிமா
எனது வாழ்க்கையை மாற்றியது மலையாள சினிமா..சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த கமல்..!
எனது வாழ்க்கையை மாற்றியது மலையாள சினிமா..சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த கமல்..!
இந்திய சினிமாவின் ஜாம்பவானாகத் திகழும் கமல்ஹாசன் தற்போது தனது அடுத்த மிகப்பெரிய படமான ‘Thug Life’ன் வெளியீட்டை முன்னிட்டு தீவிர புரொமோஷனில் ஈடுபட்டு வருகின்றார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஜூன் 5ம் திகதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசை இந்த படத்திற்கே தனி ஹைலைட் எனச் சொல்லப்படுகின்றது. இந்நிலையில், ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கமல் ஹாசன் தனது சினிமா பயணத்தின் முக்கிய கட்டங்களைப் பகிர்ந்திருக்கிறார்.அந்த நேர்காணலில் கமல் கூறியவை ரசிகர்களையும் சினிமா ஆர்வலர்களையும் பெரிதும் ஈர்த்துள்ளன. குறிப்பாக, மலையாள சினிமாவைப் பற்றிய அவரது பாராட்டும், தனிப்பட்ட அனுபவமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.அதன்போது அவர் கூறியதாவது, “என்னோட ஆரம்ப காலங்களில் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ஒரே மாதிரி, எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறோம் என்கிற சலிப்பான மனநிலை இருந்தது. சரி, நிறையக் கற்றுக் கொள்ளலாம் என்று மலையாள சினிமாவிற்குச் சென்றேன்,” என்றார்.மேலும், “அங்கு சென்ற பின்னர் சினிமா குறித்த எனது பார்வை, நடிப்பு எல்லாம் மாறியது. அது எனக்கு ஒரு நல்ல பயிற்சிக் காலமாக இருந்தது,” என்று தெரிவித்திருந்தார். அந்தவகையில், இந்த நேர்காணல் பல்வேறு சினிமா ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.