இலங்கை

ஒன்று சேர்ந்த எதிர்க் கட்சிகள்! அனுர அரசாங்கத்திற்கு வந்த புது சிக்கல்

Published

on

ஒன்று சேர்ந்த எதிர்க் கட்சிகள்! அனுர அரசாங்கத்திற்கு வந்த புது சிக்கல்

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வகிக்காத உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

 ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

 இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அரசாங்கத்துக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பில் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

Advertisement

 அதன்படி, சாத்தியமான அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இதே நிலைப்பாட்டிலேயே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளும் உள்ளதென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version