இலங்கை

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

Published

on

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

   மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், பிரதி தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர், நியமிக்கப்பட்டுள்ளனர்.

தவிசாளராக எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளராகவும் எம்.ஐ.எம்.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இவர்களின் நியமனங்கள் தொடர்பாக, கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

எஸ்.எச்.எம்.அஸ்பருக்கான நியமன கடிதம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை (14) கையளிக்கப்பட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் காத்தான்குடி நகரசபையில், தேசிய மக்கள் சக்தியைத் தவிர, தனிக் கட்சியாக 50 சதவீதத்தை கடந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி சபையைக் கைப்பற்றியுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version