இலங்கை

கிளிநொச்சியை சென்றடைந்தது ஊர்தி பவனி

Published

on

கிளிநொச்சியை சென்றடைந்தது ஊர்தி பவனி

  தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று (15) கிளிநொச்சியை சென்றடைந்தது.

இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பவனி வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பயணித்து, இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையும்.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதிப் போரின் சாட்சியங்கள் என்பன வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version