உலகம்
சிரியாவுடன் இஸ்ரேலுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் – டிரம்ப் வேண்டுகோள்!
சிரியாவுடன் இஸ்ரேலுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் – டிரம்ப் வேண்டுகோள்!
சிரியாவுடன் இஸ்ரேலுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சராவை சந்தித்தவேளை டிரம்ப் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சிரிய ஜனாதிபதி தனது நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் அனைவரும் வெளியேறவேண்டும் என உத்தரவிடவேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியா மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.