சினிமா
சூப்பர் சிங்கரிலிருந்து வெளியேறிய நடுவர் சித்ரா..! அவருக்குப் பதில் இனி யார் தெரியுமா..?
சூப்பர் சிங்கரிலிருந்து வெளியேறிய நடுவர் சித்ரா..! அவருக்குப் பதில் இனி யார் தெரியுமா..?
விஜய் தொலைக்காட்சியின் மிகப்பிரபலமான இசைப் போட்டி நிகழ்ச்சியாக ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10’ வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த 2023 நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இணையத்திலும், தொலைக்காட்சியிலும் பரபரப்பாக பேசப்படும் இந்நிகழ்ச்சி, இளம் பிள்ளைகளின் இசைத் திறமையை உலகிற்கு காண்பிக்கும் ஒரு மேடையாக வலம் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்த சுற்றுக்களின் மூலம் நான்கு சிறுவர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் குரலால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்கள்.நான்கு இறுதி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஐந்தாவது பிள்ளை யார் என்பதைக் தீர்மானிக்கின்ற “வைல்டு கார்டு சுற்று” தற்பொழுது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரொமோ வீடியோ கடந்த இரவு விஜய் டீவி மூலம் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தப் புரொமோவில் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயம் ஒன்று அனைவராலும் கவனிக்கப்பட்டது. சாதாரணமாக ஒவ்வொரு வாரத்திலும் பாடகி சித்ரா நடுவராக கலந்துகொள்வார். ஆனால், இந்த வாரம் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்தாலும், அவருக்குப் பதிலாக வந்த புதிய நடுவர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.இந்த வார வைல்டு கார்டு சுற்றில், இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் பாடகர் மனோவுடன் இணைந்து நடுவராக வந்திருப்பவர், தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகை ராதா. 80களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் தலைசிறந்த நடிகையாக வலம் வந்தவர் ராதா.இந்த வார வைல்டு கார்டு சுற்றில் பங்கேற்கும் பிள்ளைகள் ஏற்கனவே ஏதோ ஒரு சுற்றில் Eliminate ஆனவர்கள். அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்கின்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.பாடகி சித்ரா இல்லாமலிருந்தாலும், நடிகை ராதாவின் வருகை நிகழ்ச்சிக்கு புதிய மெருகை சேர்த்துள்ளது. இந்த வார வைல்டு கார்டு சுற்று மிகவும் முக்கியமானது. இது முடிந்ததும் சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிப் போட்டிக்கு அனைத்து போட்டியாளர்களும் தயார் நிலையில் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.