சினிமா

சேலையில் கிளாமரா போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்..! வைரலான கிளிக்ஸ் இதோ..!

Published

on

சேலையில் கிளாமரா போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்..! வைரலான கிளிக்ஸ் இதோ..!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளம் பதித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், ரசிகர்களின் மனதில் நெருக்கமான இடத்தைப் பிடித்தவர். தனித்துவமான நடிப்பு, சுறுசுறுப்பான பேச்சு மற்றும் இயல்பான சிரிப்பால் பல மக்களின் கவனத்தை ஈர்த்தார்.சினிமா பயணத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது ஆதிக்கத்தை படிப்படியாக பரப்பியுள்ள ரம்யா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களால் மீண்டும் ஒருமுறை வைரலாகியுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், அந்நிகழ்ச்சியில் தனது நக்கல் மற்றும் எளிமையான சினிமா பிம்பத்தால் பெரும் கவனத்தைப் பெற்றார்.அதைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற ரம்யா பாண்டியன், தனது நேர்மையான பேச்சுக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றார். விஜய் டீவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற போட்டியாளர்களிடம் நேர்மையான முறையில் பதில்களை சொல்லும் அவரது அணுகுமுறை பெரும்பாலான பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றது.இவர் அந்த சீசனில் நான்காவது இடத்தைப் பிடித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த காலத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள், கலகலப்பான உரையாடல்கள் மற்றும் கண்ணீர் சிந்திய சில தருணங்கள், இன்று வரை ரசிகர்களின் நினைவில் இருக்கின்றன.அத்தகைய ரம்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களில் சேலை அணிந்த அவர், அழகும் நேர்த்தியும் கலந்த ஒரு புதிய ஸ்டைலான லுக்கில் காணப்படுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “Evergreen beauty” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version