இலங்கை
தவறான முடிவெடுத்து முதியவர் உயிரிழப்பு!
தவறான முடிவெடுத்து முதியவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
தீவிரமான நோய் நிலையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த முதியவர், நோயின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.