சினிமா

திருநங்கைகளுக்கு உரிமை மற்றும் மரியாதை வேணும்..! நடிகர் விஷால் அதிரடிக் கருத்து.!

Published

on

திருநங்கைகளுக்கு உரிமை மற்றும் மரியாதை வேணும்..! நடிகர் விஷால் அதிரடிக் கருத்து.!

தமிழ் நாட்டின் சமூக கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகவும், மனித நேயத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்ற கூவாகம் சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா, கடந்த ஏப்ரல் 29ம் திகதி ‘சாகை வார்த்தல்’ நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இந்தத் திருவிழா முக்கியமாக திருநங்கைகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி, சமூகத்தில் நிலவும் அங்கீகாரம் பற்றிய விவாதங்களை மீண்டும் மையத்தில் கொண்டு வந்திருந்தது. இதனை விட மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக இருந்தது, அந்த அழகிப் போட்டியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தருணம். திருநங்கைகள் மேடையில் அரங்கேறும் அழகுப் போட்டிக்கு வந்திருந்த நடிகர் விஷால், தனது உரையில் ஆழமான உணர்வுகளோடு பேசினார். அதன்போது அவர் கூறியதாவது, “நாங்கள் அனைவரும் பெயருக்கு முன்னால் ‘திரு’ என்ற மரியாதைச் சொல்லை சேர்த்தால் தான் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம். ஆனால், உங்கள் பெயரிலேயே ‘திரு’ இருக்கிறது. அதுவே உங்களுக்கு பிறவி மரியாதையை வழங்குகிறது.” என்றார்.இந்த வார்த்தைகள் மேடையில் இருந்த திருநங்கைகள் அனைவரிடமும் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தின. தங்கள் இனத்தை ஊக்குவிக்கும் இந்தக் கருத்துக்கள், விஷாலின் உண்மையான மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version