சினிமா
நீங்க லெஜெண்டா இருக்கலாம்… நான் புதுப் பையன் இல்ல; கமலைக் கலாய்த்த சிம்பு..!
நீங்க லெஜெண்டா இருக்கலாம்… நான் புதுப் பையன் இல்ல; கமலைக் கலாய்த்த சிம்பு..!
இந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருக்கும் படம் ஒன்று விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. அந்தப்படம் வேறு எதுவுமில்லை கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படம் தான். கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இணைந்து உருவாக்கும் இந்த மாபெரும் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்க இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ தற்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.‘ஜிங்குச்சா’ பாடலை இசைத்தது ஏ.ஆர். ரஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன் இணையத்தில் ரசிகர்கள், “ரஹ்மானின் ராக்கிங் ரீஎன்ட்ரி” எனப் புகழ்ந்து வருகின்றார்கள்.பாடல் ரிலீஸுக்குப் பிறகு, படத்திற்கான முக்கிய கட்டமாக டிரெய்லர் வெளியிடுவதற்கான நாளும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் தகவலின்படி, ‘Thug Life’ படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் வருகின்ற மே 17ம் திகதி வெளியாக இருக்கிறது. இதற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.படத்தின் மொத்த இசையும், மே 24ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன், மணிரத்தினம், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு மற்றும் த்ரிஷா போன்ற முக்கிய குழுவினரும் கலந்துகொள்ளவுள்ளனர். அந்தவகையில் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கான நேர்காணலில் கமல்ஹாசன் தனது அனுபவங்களையும், ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவுடன் நடிப்பது குறித்த தனது பார்வையையும் பகிர்ந்துள்ளார்.அதன்போது, சிம்பு செட்டுக்கு வரும்போது, எல்லோரும் ‘நீ ஒரு லெஜெண்டுடன் நடிக்க போற என்றார்கள். அதனால் சிம்பு கொஞ்சம் பதட்டமாக இருந்தார். நான் அவரிடம் சென்று, ‘நான் யார் என்று பயப்படாதே என்று கூறினேன். அதற்கு சிம்பு நானும் புதுப் பையன் என நீங்களும் நினைத்து விடாதீர்கள்..! உங்கள் வேலையை ஒழுங்காக பாருங்கள் எனக் கூறினார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.