இலங்கை
பெரும் எதிர்பார்ப்புக்குள் செம்மணி மயானத்தில் இன்று அகழ்வுப்பணி!
பெரும் எதிர்பார்ப்புக்குள் செம்மணி மயானத்தில் இன்று அகழ்வுப்பணி!
அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன. தமிழர்களைப் பொறுத்தவரை செம்மணி சிந்துபாத்தி மயானம் நீண்டகாலமாகச் சர்ச்சைக்கு உள்ளானதாகவே இருந்துவரும் நிலையில் இன்றையதினம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை எதிர்பார்ப்புக்களை அதிகரித்துள்ளது.